காலையில் காபி, டீ குடிப்பவரா நீங்கள்?அப்போ இதை படியுங்கள்!!!

ஆயுர்வேத நடைமுறைகளின்படி காலையில் விழித்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதைப்பற்றி மேலும் அறிய இந்த கட்டூரையை படியுங்கள்.

காலையில் காபி, டீ குடிப்பவரா நீங்கள்?அப்போ இதை படியுங்கள்!!!

ஆயுர்வேத நடைமுறைகளின்படி காலையில் விழித்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதைப்பற்றி மேலும் அறிய இந்த கட்டூரையை படியுங்கள்.

நம்மில் பெரும்பாலோருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அல்லது காபி வேண்டும். ஆனால் இப்படி வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

ஆயுர்வேத நடைமுறைகளின்படி விழித்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது சிறந்தது . இப்படி செய்வதால் நம் குடல் சுத்தமடைந்து, உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுகிறது. சரி!  நமக்குள் அடுத்த கேள்வி வரும்.சாதாரண தண்ணீர் சிறந்ததா?அல்லது வெதுவெதுப்பான நீரா? என்று. 

மருத்துவர்களின் கூற்றுப்படி, வெதுவெதுப்பான நீர் சிறந்தது. இப்போது பெரும்பாலானோர் காலையில், கோதுமைப் பருப்புச் சாறு, முருங்கைச் சாறு, வெதுவெதுப்பான எலுமிச்சை டீ, போன்றவற்றை குடிக்கிறார்கள். இந்த சாறுகள் ஊட்டச்சத்து நிறைந்தவை தான் என்றாலும், எல்லாருக்கும் பொருந்தாது. ஆனால் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.

நாளின் தொடக்கமாக, வெதுவெதுப்பான நீர் குடித்தால் எடை குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா?வெதுவெதுப்பான நீர், வளர்சிதை மாற்றத்திற்கு நிலைத்தன்மையைக் கொண்டு வந்து, பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. இதனால் செரிமானம் சரியாக இருக்கும். 

எனவே, பித்தத்தை கட்டுப்படுத்த, காலைபானமாக ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள்.